நடராஜருக்கு வாசனை திரவிய சிறப்பு அபிஷேகம் | Natarajar Aarudhra dharisanam | vellore
மார்கழி மாதம் என்றாலே நினைவிற்கு வருவது அதிகாலை பூஜைகளும் பஜனைகளும் தான் சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் வரும் நாளில் நடராஜர் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாத முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் மார்கழி திருவாதிரையன்று சிதம்பரத்தில் ஆனந்த திருநடன காட்சியளித்தார் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். திருவாதிரை சிறப்பு பிரசாதமாக களி செய்வர் அனைத்து சிவாலயங்களிலும் இன்று ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடைபெற்றது ஆருத்ரா அபிஷேகத்தில் நடராஜரை தரிசித்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும். முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் அதிகாலை மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது நடராஜ பெருமான் சமேத சிவகாமி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தியாகராஜப் பெருமானின் வலது பாத தரிசனம் பெற்றனர்