சிறந்த ஆசிரியை விருது வழங்கிய மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி | Virudhunagar | best teacher award
விருதுநகர் சங்கரலிங்கபுரத்தில் செயல்படும் அங்கன்வாடி மைய ஆசிரியை ஜெய்லானி. இவர் குழந்தைகளை கண்டவுடன் குழந்தையாகவே மாறி விடுவார். அங்கன்வாடி மையம் வரும் குழந்தைகளுக்கு டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி மழலைமொழியில் கல்வி கற்று வருகிறார். நல்லொழுக்கம், கலைத்திறனை மேம்படுத்துவது என தனது பயிற்று விக்கும் திறனால் குழந்தைகளின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். குழந்தைகள் மீது அன்பும், மிகுந்த அக்கறையும் கொண்ட ஆசிரியை ஜெய்லானியின் சேவை கவுரவிக்கும் வகையில் டில்லி செங்கோட்டையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜெய்லானி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அங்கு முன்பருவ கல்வியில் சிறந்த ஆசிரியை என்ற விருதினை பெண்கள் நல குழந்தைகள் மேம்பாட்டு மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி வழங்கி கௌரவித்தார். விருதுகளை குழந்தை செல்வங்களின் காலடியில் சமர்ப்பித்து மகிழ்வதாக ஆசிரியை ஜெய்லானி பரவசம் அடைந்தார்.