உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / தேர்தல் வருதுல அதான்! | ₹2 Crore each for Farmers | Department of Agriculture | Agribusiness

தேர்தல் வருதுல அதான்! | ₹2 Crore each for Farmers | Department of Agriculture | Agribusiness

தமிழகத்தில் 100 வேளாண் மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் தொழில் துவங்குபவர்களுக்காக தமிழக அரசு தலா 2 கோடி ரூபாய் வரை மானியம் வழங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்க விரும்பும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேளாண் வணிகத்துறையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மதிப்புக் கூட்டும் விதமாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பதப்படுத்தும் மையங்களை, நிறுவனங்கள் அல்லது தொழில்முனைவோர்கள் கூட புதிதாக தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்குவோருக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை