மெக்கா சென்ற பெண்ணிடம் பெண் அதிகாரி சொன்னது என்ன? customs woman officer madras high court sabeena
சென்னையை சேர்ந்தவர் சபீனா. இவர் தனது கணவர் முகமது உசேனுடன் கடந்த ஆண்டு மெக்காவுக்கு புனித பயணம் சென்றிருந்தார். இந்தாண்டு ஜனவரி 3ம்தேதி குவைத் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார். சபீனா மற்றும் கணவர் உசேன் உடைமைகளை பெண் அதிகாரி தலைமையில் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சபீனா பர்தா அணிந்திருந்தார். நீங்கள் தங்கம் கடத்துகிறீர்களோ? என எனக்கு சந்தேகமாக உள்ளது. தங்கம் கடத்தி வருவதற்காகவே முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர் என சபீனாவை அவமானப்படுத்தும்விதமாக பெண் அதிகாரி பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக பெண் சுங்க அதிகாரிக்கு எதிராக சென்னை சுங்கத்துறை தலைமை கமிஷனரிடம் சபீனா புகார் செய்தார்.