21 குழந்தைகள் உயிரை பறித்த நிறுவனத்துக்கு சீல்?: அமைச்சர் தகவல் | Pharma company | arrest
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் மரணம் அடைந்தது உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. குழந்தைகள் உயிரை பறித்த, கோல்ட்ரிப் இருமல் மருந்து காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா கம்பெனியில் தயாரிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை, மத்திய பிரதேச போலீசார் சென்னை கோடம்பாக்கம் வீட்டில் கைது செய்தனர். அவரை மத்திய பிரதேசம் அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர். மருந்து நிறுவன மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, மருந்தின் தரத்தை ஆய்வு செய்ய தவறிய காஞ்சிபுரம் மண்டல மருந்து தர கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கம்பெனியை நிரந்தரமாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.