உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய நீதிபதிகள் நியமனத்தில் வேகம் காட்ட வழக்கறிஞர்கள் எதிர்பார்ப்பு | 12 Judges to retire | 2025 N

புதிய நீதிபதிகள் நியமனத்தில் வேகம் காட்ட வழக்கறிஞர்கள் எதிர்பார்ப்பு | 12 Judges to retire | 2025 N

2023 ஜனவரியில் 23 காலியிடங்களுடன் 52 நீதிபதிகளை கொண்டிருந்த சென்னை ஐகோர்ட், 2024ல் 67 நீதிபதிகளுடன் இன்னிங்ஸை துவக்கியது. கடந்த 12 மாதங்களில், ஐந்து நீதிபதிகள் ஓய்வு பெற்ற நிலையில், புதிய வரவுகளுடன் சேர்த்து இப்போது 66 நீதிபதிகள் இருக்கின்றனர். ஐகோர்ட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஆனால் காலியிடங்கள் இன்றி, முழுமையான நீதிபதிகளை கொண்டு ஐகோர்ட் இயங்கி பல ஆண்டுகளாகி விட்டது. இந்த சூழலில் 2025ல் மட்டும், 12 நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். ஜனவரியில் நீதிபதி சேஷசாயி தொடங்கி, செப்டம்பரில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உட்பட டிசம்பர் வரை அடுத்தடுத்து நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். இவர்களை தொடர்ந்து 2026ல் மூன்று நீதிபதிகளும், 2027ல் நான்கு, 2028ல் எட்டு நீதிபதிகளும் ஓய்வு பெறுகின்றனர். கடைசி அதிகபட்சமாக 2023ல் மட்டும் 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டில், மூன்று நீதிபதிகள் வந்தனர். 2025ல் கணிசமான எண்ணிக்கையில் நீதிபதிகள் ஓய்வு பெறுவதால், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகள் அனுப்புவதை விரைவுபடுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை