உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்பாக்கி சுடுதலில் நம்பிக்கை தந்த பாக்கர் 25 M Pistol | Manu Bhaker | Paris Olimpic |

துப்பாக்கி சுடுதலில் நம்பிக்கை தந்த பாக்கர் 25 M Pistol | Manu Bhaker | Paris Olimpic |

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவை பதக்கப் பட்டியலில் சேர்த்து பெருமைப் படுத்தியவர் 22 வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர். 10 மீட்டர் பிஸ்டல் பிரிவு மகளிர் ஒற்றையரில் முதலில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், அதே பிரிவில் கலப்பு இரட்டையரிலும் வெண்கலம் வென்றார். இன்று 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் தகுதி சுற்று நடைபெற்றது. மனு பாக்கர் உள்பட எட்டு வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 590 புள்ளிகளுடன் மனு பாக்கர் 2-வது இடம் பெற்றார். முதல் இடம் ஹங்கேரி வீராங்கனை வெரோனிகா மேஜருக்கு கிடைத்தது.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை