ஜம்மு காஷ்மீரில் ராணும் நடத்திய ஆபரேஷனில் 'Human GPS' | bagu khan| infiltration| jammu kashmir enco
ஜம்மு காஷ்மீரின் குரேஸ் செக்டாரில் நவ்ஷெரா நார் என்ற இடத்தின் அருகே பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்திய ராணுவம், ஆபரேஷன் நவ்ஷெ ராநார் 4 Operation Naushera Nar IV மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று, இந்திய எல்லைக்குள் ஊருவ முயன்ற பயங்கரவாதிகளை வேடையாட நமது வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது இரு தரப்பினர் இடையே சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில், ஒரு பயங்கரவாதி சமந்தர் சாச்சா எனப்படும் பாகு கான். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டு வந்தவன். பல ஆண்டுகளாக ராணுவத்தினர் தேடி வந்த நிலையில் ஊடுருவல் முயற்சியின்போது கொல்லப்பட்டு உள்ளான். பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்துள்ளான். ஹிஸ்புல் கமாண்டராக இருந்தாலும், குரேஸ் செக்டார் உள்ளிட்ட பகுதிகளில் வேறு சில பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் முயற்சிகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்துள்ளான். நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சிகளுக்கு பாகு கான் காரணமாக இருந்துள்ளான். குரேஸ் செக்டாரில் உள்ள கடினமான இடங்கள் மற்றும் ரகசிய பாதைகளை அறிந்து வைத்திருந்ததன் மூலம் பல ஊடுருவல் முயற்சிகளை வெற்றிகரமாக செய்திருக்கிறான். இதனால், பாகு கானை பயங்கரவாத அமைப்புகள் மனித ஜிபிஎஸ் என்று அழைத்து வந்தன. பாகு கான் கொல்லப்பட்டதன் மூலம், பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகளில் அவனது பல ஆண்டு பங்களிப்பு முடிக்கப்பட்டு உள்ளது. #HumanGPS #BaguKhan #Infiltration #JandKEncounter #SecurityForces #NationalSecurity #Terrorism #CounterTerrorism #BorderSecurity #MartyrsOfIndia #IndianArmy #Intelligence #AntiTerror #Surveillance #OperationSuccess #Crackdown #PeaceInJammuKashmir #TerroristNeutralized #Vigilance