அதிகாலை துயரம்: இரு விபத்துகளில் 6 பேர் மரணம் | Car Accident | 6 People Died | Viluppuram | Ulundurp
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வி. மகன் பிரவீன். பிரவீனுக்கு, பெண் பார்ப்பதற்காக குடும்பத்துடன், ஒரு காரில் சென்னை நோக்கி சென்றனர். காரை டிரைவர் செல்லப்பாண்டி ஓட்டினார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிடாகம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றனர். திடீரென கார் அங்கிருந்த பாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் செல்வம், டிரைவர் செல்லப்பாண்டி, பிரவீனின் சித்தி கவிதா ஆகியோர் ஸ்பாட்டிலேயே பலியானார்கள். பிரவீன், தாய் செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.