டெல்லி அரசியலில் ஆம் ஆத்மிக்கு மேலும் ஒரு சறுக்கல்Kejriwal|AAP 15 Councillors Resigned
டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மியை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கையோடு, இந்திரபிரஸ்த விகாஸ் என்ற புதிய கட்சி துவங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். கட்சியின் மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயல் தலைமையில், 15 கவுன்சிலர்களும் அணி திரண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, 2022 தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தவர்கள். தற்போது, புதிய கட்சியை துவங்க உள்ளனர். Bytes டில்லியில் ஆட்சியை இழந்தது; மூத்த தலைவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பது; உள்ளாட்சி நிர்வாகத்திலும் அதிகாரத்தை இழந்தது என அடுத்தடுத்த சறுக்கல்களை சந்தித்தது ஆம் ஆத்மி. தற்போது 15 கவுன்சிலர்கள் விலகி இருப்பது அந்த கட்சிக்கு மேலும் ஒரு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.