/ தினமலர் டிவி
/ பொது
/ அந்தரத்தில் தொங்கி விழுந்த டீசல் டேங்கர் லாரி | Accident | Lorry | Tanker Lorry
அந்தரத்தில் தொங்கி விழுந்த டீசல் டேங்கர் லாரி | Accident | Lorry | Tanker Lorry
பெங்களூருவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி டேங்கர் லாரி வந்தது. வியாழனன்று இரவு தூத்துக்குடியில் டீசல் இறக்கிவிட்டு லாரி டிரைவர் சந்திரசேகர், கிளீனர் கிரணுடன் பெங்களூரு கிளம்பினார். திண்டுக்கல்-பழனி பைபாஸ் ரோட்டில் வந்த போது மேம்பாலத்தில் லாரி டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து சென்று அந்தரத்தில் தொங்கியது. மேம்பாலத்தில் இரு வழி பாதைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் கீழே விழுந்தது.
நவ 29, 2024