உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்பளம் போல் நொறுங்கிய கார் 2 பேர் சீரியஸ் |Accident|Medical Students|Thoothukudi | Investigation

அப்பளம் போல் நொறுங்கிய கார் 2 பேர் சீரியஸ் |Accident|Medical Students|Thoothukudi | Investigation

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவர்கள் சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன், கீர்த்தி குமார், மற்றும் சரண். நண்பர்களாகிய 5 பேரும் நேற்று இரவு காரில் வெளியே சென்று விட்டு கடற்கரை சாலை வழியாக விடுதிக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை சாருபன் ஓட்டி வந்தார். அதிகாலை 4 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்தது கடற்கரை சாலையில் படகு குலாம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த மரத்தில் வேகமாக மோதியது. முன்பக்கம் முழுதும் சேதமானதில் காரில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் சாருபன், ராகுல் செபஸ்டின் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகிலன் இறந்தார். படுகாயமடைந்த கீர்த்தி குமார் மற்றும் சரண் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து தூத்துக்குடி தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை