விசாரணை கைதி செயலால் பதறிய போலீஸ் ஸ்டேஷன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நல்லாம்பட்டியை சேர்ந்த யுவராஜை, வடமதுரை போலீசார் பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது பாத்ரூம் செல்வதாக கூறி சென்ற யுவராஜ், பாத்ரூம் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தனக்கு தானே கழுத்தை அறுத்தார். இதை கண்ட போலீசார் பதறினர். மேற்கொண்டு அவர் எதுவும் செய்துகொள்ளாமல் இருக்க யுவராஜின் கையை பிடித்து தடுத்தனர். கழுத்தில் கீறல் விழுந்து ரத்தம் வழிய, அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஜெயிலுக்கு போனது உறுதி என தெரிந்ததும், கவனத்தை திசை திருப்ப யுவராஜ் அப்படி நடந்து கொண்டதாக போலீசார் கூறினர்.
ஆக 03, 2024