உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கைது வரை சென்ற கார் பார்க்கிங் பிரச்னை | actor darshan arrested | car parking issue | judge son | ch

கைது வரை சென்ற கார் பார்க்கிங் பிரச்னை | actor darshan arrested | car parking issue | judge son | ch

பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தொடர்ந்து விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகளில் தர்ஷன் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கார் பார்க்கிங் பிரச்சனை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முகப்பேரில் வசிக்கும் தர்ஷன் வீட்டருகே டீ ஷாப் ஒன்று உள்ளது. இங்கு ஐகோர்ட் பெண் நீதிபதியின் மகன் ஆதிச்சூடி, அவரது மனைவி லாவண்யா, மாமியார் மகேஷ்வரியுடன் நேற்றிரவு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது காரை தர்ஷன் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். காரை எடுக்கும்படி தர்ஷன் கூறியபோது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. அப்போது தர்ஷன் அவரது சகோதரர் லோகேஷ் இருவரும் நீதிபதி மகன் ஆதிச்சூடி, லாவண்யா, மகேஷ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆதிச்சூடி, மகேஷ்வரி இருவரும் தனியார் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக நடிகர் தர்ஷன், சகோதரர் லோகேஷ் மீது ஜெஜெ நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் தர்ஷன் தரப்பிலும் தங்கள் மீது சூடான டீயை ஊற்றி தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்தனர். இருதரப்பு புகார் குறித்தும் விசாரித்த போலீசார், தர்ஷன், லோகேஷ் மீது பெண் வன்கொடுமை, ஆபாசமாக பேசுதல், காயப்படுத்துதல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். குறிப்பாக கர்ப்பிணி மீது கையை முறுக்கி தாக்கியது, வயதான மகேஷ்வரியை தாக்கியதால் பெண் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. இதேபோல் நீதிபதியின் மகன் ஆதிச்சூடி அவரது மகள் லாவண்யா, மாமியார் மகேஷ்வரி மீது ஆபாசமாக பேசுதல், காயப்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. தர்ஷன், லோகேஷிடம் விசாரணை நடத்தி வந்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை