சொந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டாரா? actor govinda shoots himself| bollywood actor | gun misfire
காலில் குண்டு பாய்ந்து நடிகர் கோவிந்தா அட்மிட் பாலிவுட் நடிகர் கோவிந்தா, காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மும்பை CRITI care மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். இன்று அதிகாலையில் அவர் மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட இருந்தார். முன்னதாக தமது சொந்த துப்பாக்கியை சோதித்து பார்த்து கொண்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக வெடித்து முழங்காலில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. நடிகர் கோவிந்தாவின் மேனேஜர் ஷஷி சின்ஷா கூறும்போது, உரையில் வைத்திருந்த துப்பாக்கி தவறி கீழே விழுந்தபோது, எதேச்சையாக வெடித்து காலில் குண்டு பாய்ந்துள்ளது. டாக்டர்கள் குண்டை அகற்றிவிட்டனர். இப்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றார். நடிகர் கோவிந்தா 80 மற்றும் 90களில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர். பல ஆண்டுகளாக அவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. கடைசியாக 2019ல் வெளியான ரங்கீலா ராஜா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு சினிமாவில் இருந்த விலகி இருக்கிறார்.