விஜய் கட்சியின் முதல் மாநாடுக்காக புக்கான ஓட்டல் அறைகள் | Actor vijay | TVK conference | Hotel rooms
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ல் நடக்கிறது. மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. மேடை அமைக்கும் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் மேடை பணி முடிந்து விடும். மாநாட்டு பணிகள் குறித்து சினிமா பிரபலங்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர். திடலை சுற்றி கொடி கம்பங்கள் நடும் பணி துவங்கி உள்ளது. மாநாட்டு திடலில் பாதுகாப்பு பணி ஏற்பாடுகள் துபாய் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மாநாடு தேதிக்கு முந்தைய 3 நாட்களுக்கு விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் தங்குவதற்காக ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சில ஓட்டல்களில் இரட்டிப்பு வாடகை பெற்று முன் பதிவாகி விட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.