உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதிய ஆதாரங்கள் இல்லை; சித்ரா கணவர் விடுதலை | actress Chitra | Chitra Case | Thiruvallur District Co

போதிய ஆதாரங்கள் இல்லை; சித்ரா கணவர் விடுதலை | actress Chitra | Chitra Case | Thiruvallur District Co

அவரது கணவர் ஹேம்நாத் தான் கொலை செய்ததாக சித்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். சித்ராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். பின் ஹேம்நாத் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கில் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் 57 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. விசாரணை அடிப்படையில் நீதிபதி ரேவதி இன்று தீர்ப்பு வழங்கினார். போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் சித்திரா கணவர் ஹேம்நாத்தை வழக்கிலிருந்து விடுவிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ