நயன் செய்த அடுத்த சம்பவம்! செம்பருத்தி டீ பஞ்சாயத்து பரபர | Actress Nayanthara | Hibiscus Flower tea
நயன்தாரா பற்ற வைத்த தீ சோசியல் மீடியாவில் அனல் செம்பருத்தி டீ நல்லதா? நயன்தாராவும் அவர் இன்ஸ்டாவுல போட்ட செம்பருத்தி டீ போஸ்ட்டும் தான் இப்ப சோசியல் மீடியால ட்ரெண்டிங்ல இருக்கு. 2 நாள் முன்னாடி அவர் பற்ற வச்ச நெருப்பு இன்னும் கொழுந்து விட்டு எரிஞ்சிட்டு இருக்கு. செம்பருத்தி டீயை புரொமோட் பண்ற விதமா நயன்தாரா ஒரு போஸ்ட் போட்டாங்க. அதுல அவர் சொல்லி இருந்தது: என்னோட பேவரட் டீயே செம்பருத்தி டீ தான். இத குடிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லது. ஆயுர்வேதா சிகிச்சை முறையில இது ரொம்ப காலமா பயன்பாட்டுல இருக்கு. செம்பருத்தி டீல நிறைய ஆன்டியாக்சிடன்ட்ஸ் இருக்கு. இத குடிச்சா சுகர், அதிகபடியான கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் குறையும். இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு அபாயமும் குறையும். உடல் சூட்டை தணிக்கும். சரும பாதுகாப்புக்கும் உதவும். அதிகப்படியான விட்டமின் இருக்கதால பருவமழை காலத்துல செம்பருத்தி டீ குடிக்கது ரொம்ப நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை ஸ்ட்ராங்கா வச்சிருக்கும். சீஷன் நோய்களை குணப்படுத்தறதுலயும் செம்பருத்தி டீக்கு முக்கிய பங்கு இருக்குனு நயன்தாரா சொல்லி இருந்தாரு. இதுல எதாவது டவுட் இருந்தா தான்னோட நியூட்ரிசியன் கனேரிவால் கிட்ட கேட்கலாம்னும் அந்த பதிவுல நயன் சொல்லி இருந்தாரு.