மாஜி பெண் போலீசுடன் தொடர்பு! வெளிவந்த ஆதாரங்கள் | ADGP Jayaram | MLA Jagan moorthy | High Court
காதல் ஜோடியை பிரிக்க 25 லட்சம் பேரம்! யார் இந்த ஏடிஜிபி ஜெயராம்! சிக்கியது எப்படி? காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கூடுதல் டிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ ஜெகன் மூர்த்திக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்தது. ஏடிஜிபி ஜெயராம் பின்னணி குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகாவை சேர்ந்தவர் ஜெயராம், 59. ஐபிஎஸ் அதிகாரியான இவர் தமிழக போலீசில் 1997ல் பணியில் சேர்ந்தார். ஆயுதப்படை டிஐஜி மற்றும் சென்னை மாநகர போலீசில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர், மத்திய மண்டல ஐ.ஜியாக பணியாற்றி உள்ளார். இப்போது ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பணிபுரிகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற உள்ளார். சர்ச்சைகளில் சிக்குவது ஜெயராமுக்கு வாடிக்கை தான். இவர் மத்திய மண்டல ஐஜியாக இருந்தபோது தான், சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிக்கினார். பெண் எஸ்பி புகார் அளிக்கச் செல்கிறார் என்ற தகவல் அறிந்து, அவரை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்த உத்தரவிட்டதே ஜெயராம் தான் என்று கூறப்பட்டது. இச்சம்பவத்திற்கு பின் டம்மி பதவிகளில் பணி அமர்த்தப்பட்டார். வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க், சென்னை மாநகர போலீசில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணிபுரிந்த போது சென்னை ராமாபுரத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, ஸ்பா ஒன்றுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். அந்த ஸ்பா ஊழியர்களுடன் ஜெயராம், கேக் வெட்டி கொண்டாடியது வெளிச்சத்திற்கு வந்தது. இப்போது சிறுவன் கடத்தல் வழக்கில் அவர் சிக்கி இருப்பதும், ஒரு பெண்ணால் தான் என தெரிய வருகிறது.