/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுக அரசின் திட்டங்களை திமுக முடக்குவது நியாயமா? admk| palanisamy| Admk Meeting| EPS
அதிமுக அரசின் திட்டங்களை திமுக முடக்குவது நியாயமா? admk| palanisamy| Admk Meeting| EPS
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பெரும்பாலானவை திமுக அரசை கண்டிக்கும் தீர்மானங்கள். ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காமலும், இலவச வேஷ்டி சோலை, பள்ளி சீருடை வழங்குவதில் மெத்தன போக்கோடும் திமுக அரசு செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மின் கட்ட உயர்வை ரத்து செய்யவும், மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
ஆக 16, 2024