உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்சி ஏர்போர்ட்டில் 2018 அக்டோபர் 12 சம்பவம் Air india express place accident 2018 incident tri

திருச்சி ஏர்போர்ட்டில் 2018 அக்டோபர் 12 சம்பவம் Air india express place accident 2018 incident tri

திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட ஏர் இண்டியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் இரண்டரை மணிநேரம் வானிலேயே வட்டமடித்து விட்டு, மறுபடியும் திருச்சியிலேயே தரையிறங்கியது. விமானிகளின் சாமர்த்தியத்தால் 141 பயணிகள் உயிர் தப்பினர். இதே அக்டோபர் மாதத்தில் 6 ஆண்டுக்கு முன் திருச்சி ஏர்போர்ட்டில் நடந்த இன்னொரு விமான விபத்தை அதிகாரிகள் நினைவுகூர்ந்தனர். 2018 அக்டோபர் 12ம்தேதி திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அதிகாலை 130 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 130 பயணிகள் இருந்தனர். ஓடுபாதையில் இருந்து மேலே கிளம்பியபோது ஐஎல்எஸ் எனப்படும் லேண்டிங் சிக்னல் டவர் மீதும், சுற்றுச்சுவர் மீதும் மோதி விட்டு மேலே பறந்தது. இதனால் விமானத்தின் வயிற்றுப்பகுதியில் பலத்தசேதம் ஏற்பட்டது. ஆனால் அது பைலட்டுகளுக்கு தெரியவில்லை. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஷயத்தை சொன்ன பிறகு விமானத்தை மும்பையில் பைலட்டுகள் தரையிறக்கினர். இப்போது போலவே அப்போதும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்போதைய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உடைந்த சுற்றுச்சுவரையும், டவரையும் பார்வையிட்டார்.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை