உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தந்தையை இழந்தவன் நான்: மத்திய அமைச்சர் உருக்கம் Air India Flight Crash | Ram Mohan Naidu Intervie

தந்தையை இழந்தவன் நான்: மத்திய அமைச்சர் உருக்கம் Air India Flight Crash | Ram Mohan Naidu Intervie

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் இருந்த 241 பேர் பலியாகினர். அந்த விமானம் டாக்டர்கள் குடியிருப்பில் விழுந்ததில், மருத்துவ மாணவர்கள் உட்பட அங்கிருந்த பலர் பலியாகினர். இதையடுத்து போயிங் ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவற்றை தீவிர ஆய்வுக்கு உட்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: ஆமதாபாத்தில் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கிவிட்டது. இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டதும், எனக்கு ஒன்றும் புரியவில்லை. நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காக, ஆமதாபாத்துக்கு விரைந்தேன். நான் வருவதற்குள், குஜராத் மாநில அரசு நிர்வாகம் அனைத்து பணிகளையும் செய்திருந்தது. விமான நிலைய அதிகாரிகள், குஜராத் அரசு, மீட்பு படையினர் முழு வீச்சில் களம் இறங்கியிருந்தனர். உறவுகளை இழந்தவர்களுக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியாது. இப்படிப்பட்ட சம்பவம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் நன்கு அறிவேன். விபத்தில் என் தந்தையை இழந்தவன் நான். அந்த வலியும், வேதனையும் எனக்கு புரியும். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளத்தை காண அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளியானதும், உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, பாேயிங் ரக விமானங்களின் பாதுகாப்பு அம்சங்களை தீவிர பரிசோதைனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளோம். தற்போதைய சூழலில் நம்மிடம் 34 போயில் 787 ரக விமானங்கள் உள்ளன. அவற்றில் 8 விமானங்களில் ஏற்கனவே சோதனை முடிந்துவிட்டது. மீதமுள்ளவற்றிலும் விரைந்து முடிக்கப்படும். பயணிகள் பாதுகாப்பு மிக மிக அவசியம் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நாம் எப்போதும் பாதுகாப்பு விவகாரத்தில் உறுதியான, தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறோம். இனி அது மேலும் வலுப்படுத்தப்படும். விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது. அதில் என்ன பதிவாகியுள்ளது என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த விவரம் கிடைத்த பின் அனைத்து மர்மமும் விலகும். எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என ராம் மோகன் நாயுடு கூறினார்.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி