சிவராஜ்சிங்கிடம் மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா air india| shivraj singh chauhan| Minister chauhan
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய பிரதேசம் போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது ஏற்பட்ட மோசமான பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இயற்கை வேளாண் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க டெல்லிக்கு செல்ல வேண்டியிருந்தது. ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். இருக்கை எண் 8C ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த சீட்டில் உட்கார்ந்தபோதுதான் தெரிந்தது. அது உடைந்து உள்ளே பள்ளமாக இருந்தது. உட்காரவே சிரமமாக இருந்தது. விமான ஊழியரிடம் கூறியபோது, அந்த சீட் சரியில்லை; அதன் சீட்டை விற்க கூடாது என்று நிர்வாகத்திற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும் சீட் விற்றுவிட்டதாக அவர்கள் கூறினர். சக பயணிகள் தங்கள் சீட்டில் மாறி உட்காருமாறு கூறினர். ஆனால், வேறு யாருக்கும் என் சிரமம் தரக்கூடாது என்று அதே சீட்டில் உட்கார்ந்து பயணித்தேன். டாடா நிறுவனம் பொறுப்பேற்ற பின், ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டு இருக்கும் என்று நினைத்திருந்தேன் ஆனால், எந்த மாற்றமும் இல்லை. பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்த பிறகு, மோசமான, வலிமிகுந்த சீட்டில் அவர்களை உட்கார வைப்பது முறையல்ல. இது பயணிகளை ஏமாற்றும் செயல் இல்லையா?