உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உக்ரைன் போரை நிறுத்தி மோடி வெல்வாரா Ajit Doval meets Putin | BRICS-NSA meeting | Russia vs Ukraine

உக்ரைன் போரை நிறுத்தி மோடி வெல்வாரா Ajit Doval meets Putin | BRICS-NSA meeting | Russia vs Ukraine

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா எடுத்து வரும் தீவிர முயற்சி உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் என்எஸ்ஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யா செல்ல இருப்பது உலக அரசியலில் பரபரப்பை எகிற வைத்துள்ளது. 2 நாள் பயணமாக இம்மாதம் 10, 11ம் தேதிகளில் ரஷ்யா செல்கிறார் என்எஸ்ஏ அஜித் தோவல். மாஸ்கோ நகரில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து, உக்ரைன் போரை அமைதி பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டியது பற்றி ஆலோசிக்க உள்ளார். அப்போது அமைதி பேச்சு வார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரும் வழிமுறைகள் பற்றி மோடி சொல்லி அனுப்பிய விஷயங்களை புடினிடம் அஜித் தோவல் விவரிக்க உள்ளார்.

செப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !