/ தினமலர் டிவி
/ பொது
/ என்சிசி முகாமில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு விருது | NCC Republic Day Camp | Best Cadet Award
என்சிசி முகாமில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு விருது | NCC Republic Day Camp | Best Cadet Award
தமிழ்நாடு மண்டல மாணவிக்கு பிரதமர் மோடி கவுரவம் என்சிசி சிறந்த கேடட் விருது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் என்சிசி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், தடைகளை தாண்டுதல், குழு கலை நிகழ்ச்சிகள், தனித்திறனை காட்டுதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட என்சிசி மாணவர்களுக்கு பெஸ்ட் கேடட் விருது வழங்கினார் பிரதமர் மோடி. சீனியருக்கான தரைப்படை பிரிவில் மத்தியபிரதேச மண்டல மாணவி கவுசுகி சுக்லா, ராஜஸ்தான் மண்டல மாணவர் நமன் சவுத்ரி சிறந்த கேடட் ஆக தேர்வாயினர்.
ஜன 27, 2025