உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதுதான் திமுக ஆட்சியின் சாதனையா? | Anbumani | Davos summit 2025

இதுதான் திமுக ஆட்சியின் சாதனையா? | Anbumani | Davos summit 2025

டாவோஸ் மாநாட்டில் தமிழகத்துக்கு கிடைத்த தொழில் முதலீடு எத்தனை கோடி என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 2025ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாடு நடக்கிறது. வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழகம் என்ற முழக்கத்துடன் தமிழக குழு கலந்து கொண்டது. இன்று வரை தமிழகத்துக்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது தமிழகத்துக்கு பெரும் தோல்வி ஆகும். உலகப் பொருளாதார மாநாட்டில் மஹாராஷ்டிரா 3 நாட்களில் 15.70 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. தெலுங்கானா 1.79 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறது. அமேசான் இணையச் சேவைகள் நிறுவனம் மட்டுமே 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. உலகப் பொருளாதார மாநாடு நிறைவடையவுள்ள நிலையில் தமிழக குழுவினர் சுமார் 50 சந்திப்புகளை நடத்தியும் முதலீட்டுக்கான எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவின் பிற மாநிலங்கள் எங்களுக்கு போட்டி இல்லை. வெளிநாடுகள் தான் எங்களுக்கு போட்டி என்றெல்லாம் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வந்தது.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !