மலைப்பாதையில் பரபரப்பாக்கிய கோர விபத்து | Andhra bus accident | Mogili Ghat road | Palamaneru
ஒரு பஸ், 2 லாரிகள் மோதி பயங்கர விபத்து பிரிந்த 8 உயிர்! ஸ்தம்பித்த ஹைவேஸ் திருப்பதியிலிருந்து பெங்களூரு நோக்கி மதியம் 2.30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று கிளம்பியது. 35 பயணிகள் உள்ளே பயணித்தனர். 3.30 மணி அளவில் சித்தூர் பலமனேரி அருகே வந்து கொண்டு இருந்தனர். சித்தூர் டு பெங்களூரு ஹைவேஸில் மொகிலி மலைப்பாதையில் வந்த போது எதிர்பாராத விதமாக எதிரே இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த துயரம் அடங்கும் முன் பஸ்சின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் விபத்தில் சிக்கியது. பஸ்சின் மீது மோதாமல் இருக்க அதன் டிரைவர் பிரேக் பிடித்து பஸ்சின் பக்கவாட்டில் மோதி சாலை டிவைடரை உடைத்து நின்றது. கம்பி லோடுகள் சாலையில் விழுந்தன. இந்த கோர விபத்தால் சித்தூர் டு பெங்களூரு சாலையே ஸ்தம்பித்தது. பஸ்சில் இருந்த பயணிகள், எதிரே வந்து மோதிய லாரி டிரைவர் உட்பட 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி ஸ்பாட்டிலேயே இறந்தனர். 30 பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், எதிரே வந்த லாரி ராங் ரூட்டில் வந்து விபத்து ஏற்படுத்தியதாக கூறினார்.