தீப்பற்றி எரிந்தது கார்; பிறந்த நாளில் சோக முடிவு
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், குடிபாலாவை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சித்தைய்யா. இவர் சந்திரிகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியின் பாதுகாவராக இருந்தார். சித்தைய்யாவுக்கு பிறந்தநாள் என்பதால் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். எருபள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், திடீரென தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அடுத்த சில நெடிகளில் கார் தீப்பிடித்தது. காரில் இருந்தவர்கள் அடிப்பட்டு மயக்கமடைந்து இருந்தனர். அங்கு இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். சித்தையாவின் மகன் கிரி, மகள் காயத்திரியை படுகாயத்துடன் மீட்டனர். ஆனால், சித்தைய்யாவும், மனைவி ஜோதியும் தீயில் கருகி மரணம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகன் சீரியஸ் ஆக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். விபத்து பற்றி சந்திரகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.