பஸ் ஸ்டாண்டில் வெடித்த பார்சல்; தீப்பற்றிய டூவீலர்; பரபரப்பு Andhra|parcel blast| Workers injured
ஆந்திராவின் விஜயநகரத்தில் இருந்து பார்வதிபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு பயணிகளை ஏற்றி வந்த பஸ், அவர்களை இறங்கிவிட்டது. பின், பார்சல்கள் இறக்கும் கவுன்டருக்கு சென்றது. பஸ் மீது இருந்த பார்சல்களை தொழிலாளர்கள் இறங்கி கொண்டு இருந்தனர். சுமார் 25 கிலோ எடையுள்ள பெட்டியை இறங்கியபோது அந்த பெட்டி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், கூலி தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு பைக் தீப்பிடித்தது. கயமடைந்தவர்கள் உடனடியாக பார்வதிபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெட்டியில் வெடிபொருள்கள் இருந்ததாகவும், இறக்கும்போது ஒன்றுடன் ஒன்று உரசி வெடித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விஜயநகரத்தில் இருந்து அந்த பார்சர் வந்திருக்கிறது. விதிகளை மீறி அதை அனுப்பியவர்கள் யார்? எந்த மாதிரியான வெடிபொருள் அதில் இருந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.