உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரண பயம் காட்டும் அங்கன்வாடி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மரண பயம் காட்டும் அங்கன்வாடி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குப்பைத்தொட்டியே பரவயில்ல அங்கன்வாடி அவ்ளோ மோசம்! பிஞ்சுகளுக்கு பாதுகாப்பில்லை இது ஏதோ பழைய பாழடைஞ்ச வீடுன்னு நினைக்காதீங்க. இதுல தாங்க பிஞ்சு குழந்தைங்க படிக்கிறாங்க. கோவை மாநகராட்சி 86வது வார்டு கரும்புக்கடை, செல்ல ராவுத்தர் வீதியில் தான் இந்த அங்கன்வாடி இருக்கு. ரொம்ப வருஷமாக நடந்துட்டு இருக்கு. இப்போது இந்த பில்டிங் உருமாறி இடிஞ்சு விழுற நிலைமைக்கு வந்திடுச்சு. தரை முழுக்க ஓதம். அதுமேல பாய் போட்டு குழந்தை உட்கார வைக்கிறாங்க. படிக்குறதுக்கான உபகரணங்கள், சுத்தமான சமையல் அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதி இப்படி எதுவும் இங்க இல்லை. மொத்தத்துல மரண பயத்தை கட்டிட்டு இருக்குற இந்த அங்கன்வாடியை புதுசா கட்டித்தரணும்ங்குறதுதான் இங்க இருக்கற மக்களோட எதிர்பார்ப்பு

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ