உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலை லண்டன் பயணத்தால் தமிழகத்தில் பரபரப்பு | Annamalai | BJP | London visit | International poli

அண்ணாமலை லண்டன் பயணத்தால் தமிழகத்தில் பரபரப்பு | Annamalai | BJP | London visit | International poli

பாஜ மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த ஒரு சில வாரங்களாவே அக்கட்சி வட்டாரத்தில் வேகமாக செய்தி பரவியது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிக் கொள்வதாக, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் அண்ணாமலை கடிதம் கொடுத்து விட்டதாக டில்லியில் இருந்தே தகவல் பரவியது. இதற்கு தோதாக தனது அதிரடி அரசியலில் இருந்து சற்று விலகி நின்ற அண்ணாமலை, அடிக்கடி டில்லி சென்று பாஜ மேலிட தலைவர்களை சந்தித்து வந்தபடி இருந்தார். இதனால் அண்ணாமலைக்குப் பதில் புதிய தலைவர் நியமிக்கும் காலம் நெருங்கி விட்டதாக அண்ணாமலைக்கு பிடிக்காத தமிழக பா.ஜ தலைவர்கள் கொண்டாட்டத்தோடு செய்தி பரப்பினர். இதுமட்டுமா, தோல்வி தந்த விரக்தியில், அண்ணாமலை அரசியலை விட்டே விலகப் போவதாக வதந்திகளும் பரப்பப்பட்டன.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !