தேசியத்துக்கு போகிறார் அண்ணாமலை: பதவி அறிவிப்பு | Annamalai | BJP
தமிழக பாஜ மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அவரது பதவி காலம் நிறைவடைந்த பிறகு, தற்போது புதிய மாநில தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜ எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. சென்னை வானகரத்தில் நடந்த பா.ஜ., மாநில தலைவர் பதவியேற்பு விழாவில், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஏப் 12, 2025