மக்கள் நம்ப மாட்டார்கள் என்கிறார் அண்ணாமலை! | Annamalai | TNBJP | CM Stalin
பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பிரதமர் மீன்வளத் திட்டம், ஜல்ஜீவன் எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் அவரது முகத்தையும் தாங்கி செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அதிகமாக படியளப்பது மாநில அரசுதான்! படையப்பா பட காமெடி போல மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது ஆங்கில நாளிதழில் செய்தியாகி, விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை பாஜ அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரது பாணியிலேயே பதில் கொடுத்து பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்தியா முழுதும் மத்திய அரசு உதவியில் செயல்படும் 54 திட்டங்களும், மத்திய அரசின் 260 நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.