உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என்ன செய்றார் அண்ணாமலை பரபரப்பை கிளப்பும் வீடியோ Annamalai bjp former president agricultural land

என்ன செய்றார் அண்ணாமலை பரபரப்பை கிளப்பும் வீடியோ Annamalai bjp former president agricultural land

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே மத்தவராயபுரம் கிராமத்தில் 11 ஏக்கர் விவசாய நிலத்தை பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வாங்கினார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை அவரே ஒப்புக் கொண்டார். ஆமாம். வாங்கினேன். இதுவரை நானும், என் மனைவியும் சம்பாதித்ததில் சேமித்து வைத்த பணத்தை பயன்படுத்தியும், கடன் வாங்கியும் அந்த விவசாய நிலத்தை வாங்கினேன். அதில் பால் பண்ணை ஆரம்பிக்க கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என அண்ணாமலை சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில், அந்த நிலத்தில் அண்ணாமலை வேலையை துவங்கியுள்ளார். மாடுகளுக்கு தீனி போட்டு பாசத்துடன் பராமரிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதனுடன் everything else outside is just noise என்ற புகழ்பெற்ற சொற்றொடரையும் அவர் பதிவிட்டுள்ளார். அரசியல் வாழ்க்கை, அவதூறு வார்த்தைகள், இவை எல்லாவற்றையும் தாண்டி என் உள்மனம் சொல்வதுபோல நான் அமைதியாக வாழ்கிறேன். வதந்திகள், விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை என்கிற அர்த்தத்தில் அவர் போட்ட பதிவு சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் வடிவம் பெற்று வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாடு பாஜ தலைவராக 2021 ஜூலை முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை பதவி வகித்தார். பாஜ மாநில தலைவரானதில் இருந்து குடும்பத்துடன் செலவிட மிக குறைந்த நேரமே கிடைத்தது என பல தருணங்களில் மனம் திறந்து பேசியவர் அண்ணாமலை. குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், சில தொழில் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் தன் விவசாய நிலத்தில் மாடுகளை பராமரிக்கும் அண்ணாமலையின் வீடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி