உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனிமொழிக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி annamalai| kanimozhi| dmk| parliament| dharmendra pradhan

கனிமொழிக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி annamalai| kanimozhi| dmk| parliament| dharmendra pradhan

பார்லிமென்டில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்பதாக சொல்லி விட்டு பின் யு டர்ன் அடித்தாக அமைச்சர் கூறியது உண்மையில்லை சபையை தவறாக வழித்துகிறார். அவர் பேசும்போது, தவறாக வழித்துவது, நேர்மையற்ற, ஜனநாயகமற்ற, நாகரிகமற்ற போன்ற வார்த்தைகளை என்மீதும், திமுக எம்பிக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தினார். ஒட்டுமொத்த தமிழக உறுப்பினர்களுக்கு எதிராக அடிப்படையில்லாத குற்றசாட்டுகளை முன்வைப்பது தமிழக மக்களையும் பிரதிபலிக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, தமிழகத்தையும், அதன் மக்களையும் நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவமதித்ததற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக மற்றும் 8 கோடி தமிழர்கள் சார்பில் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக கனிமொழிக்கு, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பதிலளித்து பதிவிட்டு உள்ளார். அதில், திமுக உறுப்பினர்கள் நேர்மையற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள், நாகரிகமற்றவர்கள். இது உங்களையும் உங்கள் கூட்டத்தை மட்டுமே குறிக்கிறது.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ