உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலை அறிக்கைக்கு பின்னணி என்ன? | Annamalai | TNbjp | MGR | ADMK

அண்ணாமலை அறிக்கைக்கு பின்னணி என்ன? | Annamalai | TNbjp | MGR | ADMK

எம்ஜிஆரை புகழ்ந்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து பாஜ வட்டாரங்கள் கூறியதாவது: பாஜ ஆதரவாளர்களாக இருந்தாலும், அதிமுக பொதுச்செயலராக ஜெயலலிதா இருந்த வரை அக்கட்சிக்கே பலரும் ஓட்டளித்து வந்தனர். பாஜ ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்டால் அந்த ஓட்டுகள் அப்படியே தங்களுக்கு கிடைக்கும் என அதிமுக நிர்வாகிகளே நம்பினர். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. தமிழக பாஜவுக்கும் வலுவான தலைமை கிடைத்தது. மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா பாணியில் திமுக மற்றும் அக்கட்சி தலைவர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை