அதிகாரிகள் ரெய்டில் பல்க் ஆக பிடிபட்டது ஊழல் பணம்
ஆந்திராவை உலுக்கி கொண்டு இருக்கும் 3500 கோடி ரூபாய் மது ஊழல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, ஹைதராபாத்தின் ஷம்ஷாபாத் மண்டலம், கச்சரம் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அந்த கெஸ்ட் ஹவுசில் பெட்டி பெட்டியாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த பணம் கைப்பற்றப்பட்டது. மொத்தம் 12 அட்டை பெட்டிகளில் 11 கோடி ரூபாய் சிக்கியது. இது தவிர அங்கு பதுக்கி வைத்திருந்த மது வகைகளும் கிடைத்துள்ளன.
ஜூலை 30, 2025