ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்: அப்போலோ சொன்னது என்ன? | AR Rahman | Apollo hospital | Ameen
நீர்ச்சத்து குறைபாட்டால் அட்மிட் ஏஆர் ரகுமான் டிஸ்சார்ஜ்! பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இன்று காலை வீட்டில் தூங்கி எழுந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சையை டாக்டர்கள் அளித்தனர். உடல்நலம் தேறியதை தொடர்ந்து ஏஆர் ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே ஏஆர் ரகுமானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஆஞ்சியோ செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ரமலான் நோன்பு கடைபிடித்து வரும் ஏஆர் ரகுமான், சரியாக சாப்பிடாததால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் தான் அவர் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். சிகிச்சை முடிந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை சிறிது காலம் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஏஆர் ரகுமான் உடல்நிலை குறித்து அவரது மகன் அமீன் விளக்கம் அளித்துள்ளார். எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த உறவினர்கள், ரசிகர்கள், நலம் விரும்பிகளுக்கு நன்றி. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை சற்று பலவீனமாக இருந்தது. அதனால் நாங்கள் பரிசோதனை மேற்கொண்டோம். இப்போது அவர் இப்போது நலமுடன் இருக்கிறார் என கூறியுள்ளார்.