ஜெயிலில் இருந்தே ஸ்கெட்ச்? அதிர வைக்கும் பின்னணி | Armstrong Case | Police
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகள், கூலிப்படையினர், வக்கீல்கள் என 24 பேர் கைதாகி உள்ளனர். இரு தினங்களுக்கு முன் வேலுார் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரை மையமாக வைத்து தான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆக 14, 2024