உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாம் சரவணனை ஓட ஓட சுட்ட போலீஸ்-பரபரப்பு Armstrong case | Rowdy bomb Saravanan arrest | Arcot Suresh

பாம் சரவணனை ஓட ஓட சுட்ட போலீஸ்-பரபரப்பு Armstrong case | Rowdy bomb Saravanan arrest | Arcot Suresh

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது கொலை மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு அடிபட்ட முக்கியமான பெயர்களில் பாம் சரணன் பெயரும் ஒன்று. பாம் சரவணன் மிகப்பெரிய ரவுடி. ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரம். ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை ஒருத்தர் விடாலம் கருவறுப்பேன் என்று சபதம் எடுத்து சுற்றி வந்த நபர். எதிர்தரப்பினருக்கு பாம் சரவணன் போட்ட ஸ்கெட்சை உளவுத்துறையினர் மோப்பம் பிடித்தனர். இதனால் அடுத்த அசம்பாவிதம் நடப்பதற்குள் அவரை கைது செய்து விட வேண்டும் என்று சென்னை கமிஷனர் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பாம் சரவணன் ஆந்திராவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் பாம் சரவணனை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் வியாசர்பாடி குட்செட் ஏரியாவுக்கு பாம் சரவணன் வந்திருக்கும் ரகசிய தகவல் எம்கேபி நகர் போலீசாருக்கு கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் உடனே வியாசார்பாடிக்கு விரைந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினார் பாம் சரவணன். அதிர்ஷ்டவசமாக அவை எதுவும் வெடிக்கவில்லை. உடனே பாம் சரவணனை நோக்கி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் துப்பாக்கியால் சுட்டார். காலில் குண்டு பாய்ந்து பாம் சரவணன் அப்படியே சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். பாம் சரவணனிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தனி வழக்கு பதிவு செய்தனர். 42 வயதான பாம் சரவணன் சென்னையை கலக்கி வந்த ஏ பிளஸ் ரவுடிகளில் முக்கியமானவர். இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன. ஆள் கடத்தல், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என மொத்தம் 30 வழக்குகள். புளியந்தோப்பு வெங்கடேசபுரம் தான் சொந்த ஊர். நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதிலும் வீசுவதிலும் கில்லாடி. எனவே தான் பாம் சரவணன் என்ற பெயர் வந்தது. இவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டார். சரவணனின் அண்ணன் தென்னரசு, தம்பி மாரியும் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளர்கள்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ