உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேசத்தை காக்கும் வீரர் கஞ்சா வியாபாரி ஆனது எப்படி? Army jawan Senthil murugan arrested ganja sale Sr

தேசத்தை காக்கும் வீரர் கஞ்சா வியாபாரி ஆனது எப்படி? Army jawan Senthil murugan arrested ganja sale Sr

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இலந்தைகுளத்தை சேர்ந்தவர் செந்தில் முருகன் (32). ராணுவ வீரர். செந்தில் முருகன் கடந்த மாதம் விடுமுறையில் இலந்தை குளத்திற்கு வந்துள்ளார். அவர் ஊரில் நடமாடும்போதெல்லாம் கஞ்சா போதையில் இருப்பதாக போலீசுக்கு அவ்வூர் இளைஞர்கள் தகவல் கொடுத்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும் அவர் மீது புகார்கள் போனது. அதைத்தொடர்ந்து, போலீசார் அவரை கண்காணித்தனர். சந்தேகம் உறுதியான நிலையில், செந்தில் முருகன் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். சிறு சிறு பொட்டலங்களில் 210 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது, செந்தில்குமார் தன் தோளிலேயே ஒரு பேக்கை மாட்டியிருந்தார். அந்த பேக்கை சோதித்தபோது, அதிலும் சிறுசிறு பொட்டலங்களாக 540 கிராம் கஞ்சா இருந்தது. மொத்தம் 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். முதல் கட்ட விசாரணையில் செந்தில்குமார் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என தெரிய வந்தது. தனக்காக கஞ்சா வாங்கும் அவர், அதை தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார். மொத்தமாக சேர்ந்து கஞ்சா புகைப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். பிறகு நண்பர்களின் நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என பட்டியல் நீள, கஞ்சா விற்பனையில் தீவிரமாக இறங்கியுள்ளார். எப்போதும் தனது பேக்கில் அரை கிலோ கஞ்சாவுடன்தான் சுற்றுவார் என தெரிய வந்தது. 15 நாட்களுக்கு முன்பே லீவு முடிந்து விட்ட நிலையில் கடந்த வாரமே அவர் ராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும்; ஆனால் லீவை நீட்டித்து விட்டு ஊரில் கஞ்சா விற்று திரிந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை