ஊழல்வாதி என்ற கறையுடன் என்னால் வாழ முடியாது | Arvind Kejriwal | Aam Aadmi conference | Delhi | PM Co
டில்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநாடு நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மின்சாரம், குடிநீரை இலவசமாக்கினோம். மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தோம். கல்வியை சிறப்பாக்கினோம். இவர்களை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமானால் அவர்களின் நேர்மையை தாக்க வேண்டும் என மோடி நினைக்க தொடங்கினார். கெஜ்ரிவால், சிசோடியா மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியே நேர்மையற்றது என நிரூபித்து ஒவ்வொரு தலைவர்களையும் சிறையில் அடைக்க சதித்திட்டம் தீட்டினார். நான் இப்போது ராஜினாமா செய்து விட்டேன். காரணம், ஊழல் செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ பதவிக்கு வரவில்லை. நாட்டின் அரசியலை மாற்றவே வந்தேன்.