உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் விபூதியிட்டு தொடங்கிய தவக்காலம் | Ash Wednesday | Special Prayer |

கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் விபூதியிட்டு தொடங்கிய தவக்காலம் | Ash Wednesday | Special Prayer |

சாம்பல் புதனுடன் துவங்கிய 40 நாள் ஈஸ்டர் தவக்காலம் வேளாங்கண்ணியில் திரண்ட கிறிஸ்தவர்கள் ஏசு கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அதற்கு முன்பு 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது. இதையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ் உள்ளிட்ட பாதிரியார்கள் சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திலும் அதிகாலை சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு பின் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமாக பூசப்பட்டது. இதேபோல் அனைத்து பேராலயங்களிலும் நடந்த சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை