உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெய்சங்கர் அடியில் நொறுங்கிய கனடா முகமூடி | Jaishankar | Inida vs Cananda | Australia today issue

ஜெய்சங்கர் அடியில் நொறுங்கிய கனடா முகமூடி | Jaishankar | Inida vs Cananda | Australia today issue

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டான். இந்த விவகாரத்தில் இந்திய அரசின் சதி இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ட்ரூடோ குற்றச்சாட்டை அடுத்து இந்தியா, கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு நிஜ்ஜார் கொலை தொடர்பாக பேட்டி அளித்த ட்ரூடோ, கனடாவில் உள்ள இந்திய தூதரக உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினார். இதனால் இந்தியா, கனடா தூதரக உறவு முறியும் நிலைக்கு வந்தது. தொடர்ந்து இந்தியாவை சீண்டும் கனடாவை பல சந்தர்ப்பங்களில் இந்தியா கண்டித்தது. இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து கோயில் மற்றும் அங்கிருந்த இந்தியர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்தனர். இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங்குடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் 2 பேரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கனடா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜெய்சங்கர் பதில் அளித்தார். கனடாவுடனான உறவு பலவீனம் அடைய 3 முக்கிய காரணங்கள் உள்ளன. நிஜ்ஜார் கொலை வழக்கில் எவ்வித ஆதாரங்களையும் காட்டாமல் இந்தியா மீது கனடா அபாண்ட பழி போட்டது.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ