உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தல் நடத்தும் முன் சீர்திருத்தம் தேவை: யூனுஸ் bangladesh|elections|2025 or 2026|muhammad yunus|

தேர்தல் நடத்தும் முன் சீர்திருத்தம் தேவை: யூனுஸ் bangladesh|elections|2025 or 2026|muhammad yunus|

2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் வங்க தேச தேர்தலை நடத்தலாம் என அந்நாட்டின் இடைக்கால அரசை தலைமை ஏற்று நடத்தி வரும் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தும் முன் குறைந்தபட்ச தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்படவில்லை. அதை சரி செய்து குறை இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையத்துக்கு போதிய கால அவகாசம் தேவை. அப்படி செய்தபின், அரசியல் கட்சிகள் ஒப்புக்கொண்டால் 2025 நவம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்தலாம். இல்லையேல் 2026ன் முதல் பாதியில் தேர்தல் நடக்கும் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறினார்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை