உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெசன்ட் நகர் பீச் சம்பவத்தின் பகீர் பின்னணி | Besant Nagar | Elliots Beach | Annai Velankanni church

பெசன்ட் நகர் பீச் சம்பவத்தின் பகீர் பின்னணி | Besant Nagar | Elliots Beach | Annai Velankanni church

பெசன்ட் நகர் பீச் சம்பவத்தில் திருப்பம்! கானா பாட்டால் ஆட்டோ டிரைவர் சாவு? நள்ளிரவில் நடந்தது என்ன? டிஸ்க்: பெசன்ட் நகர் பீச் சம்பவத்தின் பகீர் பின்னணி | Besant Nagar | Elliots Beach | Annai Velankanni church சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கடந்த ஞாயிறன்று தேர் திருவிழா நடந்தது. பல்லாயிரக்கணக்கானபக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பிறகு குடும்பம் குடும்பமாக எலியட்ஸ் பீச்சில் குவிந்திருந்தனர். இரவு 11 மணியளவில்இரு கோஷ்டிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அடித்துக் கொண்டனர். வாலிபர் ஒருவரை கும்பல் கத்தரிக்கோல், பீர் பாட்டிலால் குத்திவிட்டு ஓடியது. பீச்சில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் ( எ) ராஜன் என தெரியவந்தது. மனைவி திவ்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஓராண்டுக்கு முன் பிரிந்து விட்டார். தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார். பெசன்ட் நகர் சர்ச்சுக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு ஜெயராஜ் சென்றுள்ளார். அங்குதான் கொல்லப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். ராஜனுக்கு கானா பாடல் என்றால் பிடிக்குமாம்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை