மோசமான காற்று லிஸ்டில் இந்தியாவின் தலைநகர்! best air quality | Nellai | Delhi
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுதும் தரமான மற்றும் காற்று மோசமாகி உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் தரமுள்ள காற்று இருக்கும் நகரமாக தமிழகத்தை சேர்ந்த நெல்லை முதலிடம் பிடித்துள்ளது. 5வது இடத்தில் தஞ்சை உள்ளது. நெல்லை, அருணாசல பிரதேசத்தின் நஹர்லாகன் , கர்நாடகாவின் மடிக்கேரி, விஜயபுரா, தஞ்சை, கர்நாடகாவின் கோப்பல் , உபியின் வாரணாசி , கர்நாடகாவின் ஹூப்ளி , கேரளாவின் கண்ணூர் , சத்தீஸ்கரின் சால் நகரங்கள் டாப் 10 பட்டியலில் உள்ளன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டில்லி முதலிடத்தில் உள்ளது. உபியின் காஷியாபாத் , மேகாலயாவின் பைரனிஹாட், பஞ்சாப்பின் சண்டிகர் , உபியின் ஹபூர், ஜார்க்கண்ட்டின் தனபாத் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக டில்லியில் காற்றின் தரம் அதிகளவு மாசடைந்து கொண்டே செல்கிறது. பனிமூட்டத்தால் இருள் சூழ்ந்து காணப்படும் டில்லியில், காற்று மாசுபாடும் கவலைக்குரிய விஷமாக உள்ளது. வட மாநிலங்களில் பெரும்பாலான நகரங்கள் காற்று மாசுபாட்டில் கவலைக்குரிய தரக்குறியீட்டையே பெற்றுள்ளது. கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.