உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு ஊழியருக்கே இந்த நிலைமையா? அண்ணாமலை சரமாரி கேள்வி|Bhuvanagiri|Panchayat office| VCK Councilor

அரசு ஊழியருக்கே இந்த நிலைமையா? அண்ணாமலை சரமாரி கேள்வி|Bhuvanagiri|Panchayat office| VCK Councilor

கடலூர் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவரிடம் நேற்று விசிக கவுன்சிலர் காளிமுத்து தனது வார்டில் செய்யப்பட்ட பணிக்காக பில் தயார் செய்யும்படி கூறியுள்ளார். அப்போது, வேறு ஒரு முக்கியமான பணியில் இருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். ஆத்திரமடைந்த காளிமுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி காளிமுத்து ராதாகிருஷ்ணனை தாக்கினார். ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அருகே இருந்த மற்ற பணியாளர்கள் இருவரையும் விலக்கி காளிமுத்துவை அனுப்பி வைத்தனர். ராதாகிருஷ்ணன் காளிமுத்து மீது புவனகிரி போலீசில் புகார் அளித்தார். நடந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை