உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீகாரில் 121 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நிறைவு: சில இடங்களில் வன்முறை, கலவரம் வெடிப்பு Bihar

பீகாரில் 121 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நிறைவு: சில இடங்களில் வன்முறை, கலவரம் வெடிப்பு Bihar

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்தது. அதன் படி, இன்று, 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்டமாக, வரும் 11ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. பெகுசராய், கோபால்கஞ்ச், பாட்னா, முசாபர்பூர், லக்கிசராய், முங்கர், ககாரியா, நாளந்தா உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். பல இடங்களில் நீண்ட வரிசைகளில் நின்று மக்கள் ஜனநாயக கடமை ஆற்றியதை காண முடிந்தது. இந்நிலையில், மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. சில இடங்களில் 5 மணிக்கு முன்னரே வந்து வரிசையில் காத்திருந்தவர்களும் ஓட்டளிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்கள் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், சில ஓட்டுச் சாவடிகளில் சண்டை, சர்ச்சரவு, கலவரம் வெடித்தது. லக்கிசராயில், ஓட்டுப்பதிவு மையங்களை பார்வையிடச் சென்ற, துணை முதல்வர் விஜய் சின்ஹா மீது ஆர்ஜேடி தொண்டர்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர். அவரது கார் மீது சாணி, கற்களை வீசதி தாக்குதல் நடத்தினர். அவர்களை தடுக்க முயன்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது சாணி வீச்சு நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எஸ்பிக்கு போன் போட்ட சின்ஹா அவரை கடுமையாக கண்டித்தார். ரவுடிகள், குண்டர்கள் பூத்களில் புகுந்து தாக்குதல் நடத்துகின்றனர். துணை முதல்வருக்கே இது தான் நிலைமை என ஆவேசத்துடன் கூறினார். இதே போல் மேலும் ஒரு சில இடங்களில் பாஜ - ஆர்ஜேடி தொண்டர்கள் மற்றும் ஜேடியு - ஆர்ஜேடி தொண்டர்கள் இடையே மாேதல் போக்கு ஏற்பட்டது.

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை