வெள்ளத்தில் பணியாற்றிய முன்கள பணியாளருக்கு கவுரவம் Biryani for frontline workers in Chennai corporat
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 14, 15ம் தேதிகளில் கனமழை பெய்தது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எனினும், துாய்மை பணியாளர்கள் சுற்றி சுழன்று பணியாற்றியதில், தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிந்ததுடன் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளும் உடனடியாக அகற்றப்பட்டன. வடிகால்களில் அடைப்புகள் நீக்கப்பட்டதால் மழை நீர் வேகமாக வடிந்தது. மழை, வெள்ளத்தில் சிறப்பாக செயல்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரியாணி விருந்தளித்தார். இந்நிலையில் முதல்வரை பின்பற்றி, தண்டையார்பேட்டை மண்டலம் 38வது வார்டில் மழை, வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்பட்ட துாய்மை பணியாளர்களை வார்டு உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான நேதாஜி கணேசன் கவுரவித்தார்.